கரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

May 10, 2019 08:11 AM 84

கரூர் அருகே வாழைக்காய் ஏற்றி வந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். குளித்தலை பகுதியில் வாழைக்காய் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. ஆதிநத்தம் என்னும் இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேல்நங்கவரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் , கீழ்நங்கரம் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் லாரியில் மேல் பகுதியில் பயணம் செய்த 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் குளித்தலை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பாட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted