லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ....!

Dec 13, 2019 12:22 PM 622

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

 தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களிலேயே மக்களின் மனதை லாஸ்லியா கவர்ந்தார் . அவருக்கு “லாஸ்லியா ஆர்மி” என்று ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதனை லாஸ்லியா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்த விருது கிடைத்துள்ளது என லாஸ்லியா பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted