அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

Jun 01, 2020 12:43 PM 655

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து வரும் வாரத்தில் வடக்கு நோக்கி நகரும் என்றும்,  பின்னர், புயலாக உருப்பெற்று, வரும் 3ம் தேதி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை அடையும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், வரும் 4ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted