சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

Feb 26, 2020 02:54 PM 1185

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 248 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 488 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 264 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 61 ரூபாய்க்கும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து 51 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted