குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

Nov 28, 2020 01:20 PM 846

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, டிசம்பர் 2ம் தேதி தமிழகம், தமிழகம்-புதுவை கடற்கரை பகுதிகளை நெருங்கும் எனவும், இதன் காரணமாக, டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 2, 3 தேதிகளில், ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறைக்காற்று வீசும் என்பதால், தென்கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted