உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Mar 31, 2021 10:11 AM 999

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற கூடும் எனவும், இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted