ஸ்டாலினோட சொந்த தொகுதி மக்களுக்கே இந்த நிலைமையா?

Jul 29, 2021 10:30 AM 2528

சென்னை கொளத்தூரில் முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்கச் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, அப்பகுதியினர் சந்திக்க முயன்றுள்ளனர். கொளத்தூர் அவ்வை நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலத்துக்காக வீடுகள் கையப்படுத்தும் விவகாரம் குறித்து மனு கொடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, தொகுதி மக்கள் முதல்வரைக் காண விடாமல் அவர் செல்லும்வரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதில் ஆத்திரம் அடைந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comment

Successfully posted