எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Sep 11, 2019 01:38 PM 56

சென்னை எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் இதை துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று ரயில் பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. தெற்கு ரயில்வே ஊழியர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தினமும் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக 4 இயந்திரங்கள் இந்த மத இறுதிக்குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted