புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

May 09, 2021 09:22 PM 495

திருச்சியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், திருச்சி மரக்கடை பகுதியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை, சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு உழைத்த தலைவர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

Comment

Successfully posted