மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்

May 09, 2021 03:25 PM 566

திருச்சி மரக்கடை பகுதியில் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலையின் வலது கை மணிக்கட்டை சமூக விரோதிகள் சிலர் உடைத்துள்ளனர்.

இதைக் கண்டித்தும், மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

அப்போது அங்கு வந்த போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைது செல்ல அறிவுறுத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு அம்மா உணவகம் சூறையாடப்பட்ட நிலையில் தற்போது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted