சென்னை சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஸ்டாலின்,அன்புமணி ஆஜர்

Oct 24, 2018 11:43 AM 262

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், சென்னையில் உள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தமிழக அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவதூறாக பேசிய விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் மீது, தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில், ஸ்டாலினும், அன்புமணியும் இன்று ஆஜராகினர். நீதிபதி சாந்தி முன்னிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

Comment

Successfully posted