மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Mar 25, 2019 04:49 PM 109

திமுகவினர் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவினர் பணம் கொடுத்து கூட்டத்தைக் கூட்டி, பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

சாதிக் பாட்சா கொலை வழக்கில் அவரது மனைவி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவர்களது குடும்பத்தினர் திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதேபோல், திமுக, காங்கிரசிடம் அடகு வைக்கப்பட்டு விட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநிலக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக தேர்தல் அறிக்கையை காகிதப் பூ என்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து பொய்யான வாக்குறுதிகளை தருவதாகவும் குற்றம் சாட்டினார். முன்னதாக வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

Comment

Successfully posted