ஜூன் 16ஆம் தேதி தே.ஜ.கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும்: பிரகலாத் ஜோஷி

Jun 13, 2019 12:54 PM 47

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டிருப்பதாக கூறினார். நாடாளுமன்ற வளாகத்தில் காலை பாஜக எம்.பிக்கள் கூட்டமும், மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டமும் நடைபெறும் என பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். அதேபோல் பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டமும் அன்றைய தினம் மாலை நடைபெற இருப்பதாக கூறிய அவர், இந்த ஆலோசனை கூட்டங்களில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க இருப்பதாக கூறினார்.

Comment

Successfully posted