253 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு!

Jul 09, 2020 09:32 PM 485

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை முதல் தோகைமலை பகுதி வரை 253 கிராமங்களுக்கு குடிநீர் கிடைத்திட வழி செய்யும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு 52 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பணிகள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் தொடங்கப்பட்டது. தற்போது 95 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்றுப் பகுதியில் நீரேற்றும் இயந்திரங்கள் மற்றும் குழாய்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது வெகுவிரைவில் 253 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.

Comment

Successfully posted