மாரி 2 படத்தின் படப்பிடிப்பு ஓவர் என நடிகர் தனுஷ் டிவிட்

Aug 11, 2018 05:34 PM 429
2014 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வந்தது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.  சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில்  நடித்துள்ள  இந்தப் படத்தை தனுஷின் பட நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்நிலையில்  மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மாரி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாகவும் அதில் நடித்தது மகிழ்சியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாரி 2 படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Comment

Successfully posted