அவரோட முன்னாள் மனைவி கொடுத்த 19 ஆயிரத்து 789 கோடியே 92 லட்சம் ரூபாய்!! அடேங்கப்பா!!!

Jun 17, 2021 07:53 AM 2334

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் பல்வேறு அறைக்கட்டளைகளுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான நன்கொடைகளை வழங்கியுள்ளார். உலக அளவில் பெண்களில் 3-வது பணக்காரராகவும் விளங்கும் அவர் மேலும் சுமார் ரூ.19 ஆயிரத்து 789 கோடியே 92 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத மக்களுக்கு இந்த பணத்தை அளிப்பதாகவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்த இன சமத்துவம், கலை மற்றும் கல்வி ஆகியவற்றில் பணிபுரியும் 286 அறக்கட்டளைகளை தேர்வு செய்துள்ளதாகவும் மெக்கன்சி ஸ்காட் தெரிவித்துள்ளார்.

 

image

 

Comment

Successfully posted