மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் புதிதாக 28 அமைச்சர்கள் பதவியேற்பு!

Jul 02, 2020 03:25 PM 457

சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசில் புதிதாக 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

கடந்த மார்ச் 23ம் தேதியன்று, சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார். மார்ச் மாதத்தில் முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவியேற்று, சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 5 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேச அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. யசோதர ராஜே சிந்தியா, கோபால் பார்கவா உள்ளிட்ட 28 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். பதவிப்பிரமாணம் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவர்கள் அனைவருக்கும், மத்திய பிரதேசத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Comment

Successfully posted