சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டது

Nov 09, 2019 09:57 PM 94

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில், அனைத்து வாயில்களும் ஒரு நாள் மூடப்பட்டுள்ளன.

150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது. இதன் வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நீதிமன்ற நுழைவு வாயில்கள் ஆண்டுக்கு ஒரு நாள் மூடப்படுவது வழக்கம். அதன்படி, இன்றிரவு 8 மணி முதல் ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப்பட்டுள்ளன. எனவே. யாரும் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Comment

Successfully posted