மதுரை - போடி இடையிலான ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...

Jul 17, 2019 06:49 PM 130

மதுரை - போடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மதுரை - போடிநாயக்கனூர் ரயில் தடம் சுதந்திர போராட்டத்தின் போது தொடர்புடையது என குறிப்பிட்டார். இந்த பாதையை அகல ரயில் பாதையாக்கும் விரைந்து முடித்தால் பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணையமைச்சர் அங்காடி சுரேஷ், மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணி விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

Comment

Successfully posted