மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2022-ல் நிறைவடையும்: மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்

Mar 06, 2020 07:31 AM 386

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே தமிழகம் வந்தார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வரும் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளதை சுட்டிக்காட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியா முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted