மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழப்பு

Nov 23, 2021 03:34 PM 939

மதுரை வாடிப்பட்டியில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி உயிரிழந்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் 7 வயது மகள் மேகா, கடந்த மூன்று நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய நிலையில், சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையில்தான் சிறுமி மேகா உயிரிழந்தாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தனசேகர் என்ற மருத்துவர், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted