சித்திரைத் திருவிழா தொடர்பாக அறிக்கை அளிக்க மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு

Mar 11, 2019 12:17 PM 215

மதுரையில், சித்திரைத் திருவிழா நடைபெறுவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரையில் மிகப் பிரபலமாக விளங்கும், அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 18-ம் தேதியான முதல் நாளில், தேர்த்திருவிழா நடைபெறும். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். எனவே, இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கேட்டுள்ளார்.

மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட காவல் ஆணையர், மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

 

Comment

Successfully posted