சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது

Feb 26, 2020 12:23 PM 325

குழந்தைகள் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த மதுரையைச் சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோ மற்றும் படங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வோரை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதுவரை சென்னை,திருச்சி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேரைப் போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த லாரி புக்கிங் அலுவலக பணியாளர் குமார் என்ற இளைஞர் சமூக வலைதளங்களில் சிறார்களின் ஆபாசப் படம் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவேற்றம் செய்ததாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குமாரைக் கைது செய்து, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted