மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்!

Apr 19, 2021 09:57 AM 214

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 68 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றால் 503 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 473ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 45 ஆயிரத்து 654 பேர் குணமடைந்தனர்.

டெல்லியில் புதிதாக 25 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 20 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றுக்கு 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போல், குஜராத்தில் ஒரே நாளில் புதிதாக 10 ஆயிரத்து 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 981 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, கேரளா, கோவா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மகாராஷ்டிராவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாநிலங்களில் இருந்து வருவோர், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று இல்லையென்ற சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

புனேவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted