மகாராஷ்டிராவில் 6 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு

Dec 12, 2019 08:19 PM 590

மகாராஷ்டிர மாநிலத்தில் 6 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மும்பை சிவாஜி பூங்காவில் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரேயும் 6 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் சிண்டேக்கு உள்துறை, நகர வளர்ச்சி, சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை, சுற்றுலாத் துறை ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரசின் சகன் புஜ்பால் ஊரக வளர்ச்சி, சமூக நீதி, நீர்வளம் ஆகிய துறைகளைப் பெற்றுள்ளார். காங்கிரசின் பாலாசாகிப் தோரட் வருவாய், பள்ளிக்கல்வி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றைக் கவனிக்கிறார்.

தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல் நிதி, திட்டமிடல், வீட்டு வசதி, உணவு வழங்கல், தொழிலாளர்துறை ஆகிய பொறுப்புகளை ஏற்கிறார். சிவசேனாவின் சுபாஷ் தேசாய் தொழில்துறை, உயர்கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளைப் பெற்றுள்ளார்.

காங்கிரசின் நிதின் ராவத் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு, பெண்கள், குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளைப் பெற்றுள்ளார்.

Comment

Successfully posted