மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் : நாளையுடன் பிரசாரம் நிறைவு

Oct 18, 2019 12:06 PM 221

மகாராஷ்ரா மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைவதால், இறுதிகட்ட பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 மகாராஷ்ரா மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சித்தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மராட்டிய மாநிலத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதேபோல், அரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மராட்டியத்தில் ஆளும் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே முக்கிய போட்டி நிலவுகிறது. அரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர்.

Comment

Successfully posted