இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

Aug 09, 2020 10:29 AM 1830

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இலங்கை மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிரதமராக ராஜபக்ச இன்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ராஜம்பா விஹாராய புத்தர் கோயிலில், புத்த மடாதிபதிகள் முன்னிலையில் மகிந்த ராஜபக்சவுக்கு, அதிபரும், அவரது சகோதரருமான கோத்தபய ராஜபக்ச பதவிப் பிரமாணம்,  செய்து வைத்தார்.

இலங்கை பிரதமராக ராஜபக்ச பதவியேற்பது இது 4வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted