20 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும் -அமைச்சர் தங்கமணி

Nov 05, 2018 07:13 AM 669

20 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக-வே வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்-திருச்சி சாலையில், காவேரி நகர் அருகே சில வருடங்களுக்கு முன்பு ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கல்வெட்டை திறந்து வைத்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, அதை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயத்திற்கு மீட்டர் வைப்பதாக இருந்தால் உதய் திட்டத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை சுட்டிக்காட்டினார். அதன் பயனாகவே, இந்தியா முழுவதும் விவசாயத்திற்கு மீட்டர் வைக்கப்படாத நிலை உருவாகியுள்ளது என்றார் அவர்.

20 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக-வே வெற்றி பெறும் என்றும், அதற்கான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள கூறியுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

 

Comment

Successfully posted