மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை

Jan 02, 2019 05:24 PM 321

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.களுடன் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார். மாநிலங்களவை கூடியதும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து கேள்வி நேரத்தின்போது பேசிய மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ், மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பேச நிதின் கட்கரிக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Comment

Successfully posted