அம்பன் புயல் தாக்கத்தால் மேற்குவங்கத்தில் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

May 21, 2020 02:23 PM 215

அம்பன் புயல் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தை தாக்கிய மிக மோசமான புயல்களில், அம்பன் புயலும் ஒன்று எனவும், புயல் காரணமாக சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்ததுடன் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு ஒரு லட்சம் கோடி நிவாரணம் தேவைப்படுவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளர். கொரோனா தாக்கத்தை விட மோசமான தாக்கத்தை அம்பன் புயல் ஏற்படுத்தியுள்ளதாகவும், நோய் தொற்று மற்றும் புயல் தாக்கம் உள்ளிட்ட நெருக்கடியான சூழலிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted