சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Apr 22, 2019 10:27 AM 103

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாலச்சந்திரன். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்றபோது பாலசந்திரன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted