தூக்கில் தொங்கிய காதல் மனைவி - தற்கொலைக்கு முயன்ற கணவன்!

Apr 16, 2021 07:52 AM 383

குடும்ப தகராறு காரணமாக, தன் கண் முன்னே தூக்கில் தொங்கிய மனைவியை பார்த்து, தற்கொலைக்கு முயன்ற காதல் கணவன்... என்ன நடந்தது ? பார்க்கலாம்...

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு 18 வயது பூர்த்தியடையாத நிலையில் உமா தேவி என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயன்றுள்ளார். அதற்குள், போலீசார் பாலகிருஷ்ணனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், உமா தேவி சில மாதங்களுக்கு முன்பு திருமண வயதை எட்டியதைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த பாலகிருஷ்ணனை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இருவரும் சேர்ந்து மதுரை சுந்தராஜபுரம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே, உமா தேவி போனில் பேசுவதை வைத்து, சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன், அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான், கடந்த 12-ம் தேதி இரவு உமா தேவியும், பாலகிருஷ்ணனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பிறகு இருவரும் தூங்கச் சென்றனர்.

இந்நிலையில், அதிகாலை நேரத்தில், பாலகிருஷ்ணனுக்கு வீட்டில் இருந்து ஸ்டூல் விழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி அடித்தபடி எழுந்து பார்த்த பாலகிருஷ்ணன், தன் மனைவி தூக்கில் தொங்கியபடி மயங்கி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அவரை காபாற்றி கீழே இறக்குவதற்குள் உமா தேவி உயிரிழந்துள்ளார்.

மனைவியின் சடலைத்தை கட்டிபிடித்தபடி கத்தியால் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் உமாதேவி கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்கு அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், உமா தேவியின் உடலை கைப்பற்றி, உயிருக்கு போராடிய பாலகிருஷ்னணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

உமா தேவியில் நடத்தையில் சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன், அவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததுதான், உமா தேவியின் தற்கொலைக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகைகளை வைத்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted