உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு அதிமுக வழங்கிய நிதியுதவி...

Jun 25, 2021 04:16 PM 1672

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

image

இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வியாபாரி முருகேசனை, ஏத்தாப்பூர் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், முருகேசனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன்,ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன், கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் வழங்க அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

image



Comment

Successfully posted