வேலூர் அருகே கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி!

Oct 15, 2018 04:19 PM 444

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல் வழிதுணையான் குப்பம் பகுதியில் செந்தில் குமார், ரேவதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மனைவி ரேவதி செந்தில்குமாரை கத்தியால் குத்தி உள்ளார். இதில் கணவர் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மேல்பட்டி  காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ரேவதி கைது செய்யப்பட்டார்.

Comment

Successfully posted