நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஜாமீனில் விடுதலை!

Jul 05, 2020 09:40 PM 2617

நடிகர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மோப்பநாய் உதவியுடன் சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 3வது தெருவில் உள்ள விஜயின் இல்லம், அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில், அவர் விழுப்புரத்தை சேர்ந்த புவனேஷ் என்பதும் குடிபோதையில் மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்தது. அவர் 507 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Comment

Successfully posted