பந்திப்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக தகவல்

Nov 03, 2019 08:20 PM 77

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலை அடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து 4 மாவோயிஸ்டுகள் பந்திப்பூர் வனப்பகுதிக்குள் ஊடுருவி உள்ளதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பந்திப்பூர் வனப்பகுதியில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை முழுமையாகச் சோதனை செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted