மாரியப்பன் தங்கவேலுவுக்கு சிவப்பு கம்பளத்துடன் உற்சாக வரவேற்பு

Sep 05, 2021 08:47 PM 3827

வரும் 2024ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில், நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என மாரியப்பன் தங்கவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வந்தது.  மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பாக 54 வீரர்களும் 9 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

இன்றோடு நிறைவடைந்த போட்டிகளில், இதுவரை இல்லாத அளவில் இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு, தமிழகம் திரும்பினார்.

அவருக்கு தமிழக பாராலிம்பிக் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு, தங்கப் பதக்கத்தை இலக்காக வைத்து விளையாடியதாகவும், மழை காரணமாக வெள்ளி பதக்கமே வெல்ல முடிந்தது என்றும் கூறினார்.

 

 

Comment

Successfully posted