வேலூரில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சந்தை இடமாற்றம்!

Jun 29, 2020 01:01 PM 504

வேலூரில் மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே காய்கறி சந்தை செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி மார்க்கெட் பகுதியிலுள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கிருபா வர்த்தக மையத்திற்கு காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியுடன் 81 கடைகள்  அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பூக்கடைகளும் அங்குள்ள மேல்நிலை பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தை திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே செயல்படும் என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே சந்தை திறந்திருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted