ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் வெள்ளி பதக்கம்

May 31, 2021 10:27 AM 4780

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் வெள்ளி பதக்கம் வென்றார்.

துபாயில் நடந்த இறுதிப்போட்டியில், 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், 51 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனையான நசீமை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நசீம் 3க்கு 2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்றார்.

தன்னைவிட 11 வயது குறைவான நசீமிடம் போராடி வீழ்ந்த மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Comment

Successfully posted