மாஸ் கூட்டணியுடன் இணையும் விஜய் - #தளபதி64 அப்டேட் இதோ

Aug 24, 2019 07:59 PM 424

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இன்று மாலை 6 மணிக்கு Thalapathy 64 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில் XB ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகும் இப்படத்தை “மாநகரம்” படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் எனவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகைகள், சக நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் இப்படமானது 2020ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ட்விட்டரில் #Thalapathy64, #Summer2020 ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

Comment

Successfully posted