பசுமை நிறைந்து காணப்படும் மாயார், மசினகுடி வனப்பகுதி

Nov 21, 2019 04:22 PM 303

உதகை, முதுமலை காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி - மாயார் சாலையில் பசுமை நிறைந்து காணப்படுவதால் சாலையோரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, மாயார் உள்ளிட்ட வனப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுவதால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறையின்றி கிடைக்கிறது. இதனால் வனவிலங்குகள் மாலை வேளையில் சாலைகளின் ஓரம் உலா வருகிறது. விலங்குகளில் வரவை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வனப்பகுதியில் புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும், வன விலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related items

Comment

Successfully posted