சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Jun 02, 2020 11:41 AM 1021

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தின் பிற பகுதிகளை காட்டிலும் சென்னையில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Comment

Successfully posted