இயந்திர கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!

Jan 23, 2020 08:53 PM 618

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக தேசிய மாணவர் படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது

காசியாபாத்தில் அருகேயுள்ள சதார்பூர் கிராமத்தில் உள்ள உத்திரப் பிரதேசம் ஹரியானாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதியில் இந்திய தேசிய மாணவர் படைக்கு சொந்தமான செனைர் என்ற விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறக்கினார். தேசிய நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். எனினும் விமானத்தில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தினால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Comment

Successfully posted