மீரா மிதுனின் சர்ச்சை பேச்சு வைரல்!

Aug 11, 2020 09:11 PM 1344

நடிகை வனிதா விஜயகுமார் திருமண கலாட்டா பேச்சுகள் ஓய்ந்துள்ள நிலையில், தற்போது, நடிகை மீரா மிதுனின் சர்ச்சை பேச்சுகள் வைரலாகி வருகின்றன.

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். அதே நேரம், குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார். இதற்கு, இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்தார். இதனிடையே, நடிகர்கள் விஜய், சூர்யா ரசிகர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று மலை போல், சமூக வலைதளங்களில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். தனது கருத்தை 2018 ம் ஆண்டு வெளியிட்ட பதிவை டேக் செய்து நடிகர் சூர்யா ட்விட் செய்துள்ளார்.

Comment

Successfully posted