தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி

Mar 16, 2019 10:03 AM 83

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்றார். முதலமைச்சரை பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் வரவேற்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார். முதலமைச்சருக்கு விஜகாந்தும் பொன்னாட்டை போர்த்தி வரவேற்றார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுக தேமுதிக முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Comment

Successfully posted