நாமக்கலில் மெகா மாராத்தான்: மத்திய பிரதேச வீரர் முதலிடம்

Dec 15, 2019 12:25 PM 615

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தனியார் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மெகா மாரத்தானில், 21 கிலோ மீட்டர் ஓட்டத்தில், மத்திய பிரதேச வீரர் முதலிடம் பெற்றார்.

ராசிபுரத்தில் தனியார் சங்கம் சார்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, 3ம் ஆண்டாக மெகா மாரத்தான் 2019 என்ற ஓட்டப்போட்டி நடைபெற்றது. 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 21 கிலோ மீட்டர் என, 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில், கர்நாடக மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்றனர்.

700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஓட்டப் பந்தயத்தில், 21 கிலோ மீட்டர் பிரிவில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரர் சாண்டிப் சிங் முதலிடத்தையும், கோவையை சேர்ந்த வீரர் வினோத் குமார் 2-ம் இடத்தையும், திருச்சியை சேர்ந்த வினித்  3-ம் இடத்தையும் பிடித்தனர். மகளிர் பிரிவில் பெங்களூருவைச் சேர்ந்த ஆஷா முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த கீதா 2ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

Comment

Successfully posted