தமிழகம்-கர்நாடகா இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாதுவில் அணை

Aug 07, 2019 11:06 AM 222

தமிழகம் மற்றும் கர்நாடாக இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மேகதாதுவில் அணைகட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசு இருமுறை வலியுறுத்தியுள்ளதை குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, தமிழகம் - கர்நாடகா இடையே இணக்கம் ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க முடியும் என்று தெரிவித்து விட்டது.

கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மறுத்துள்ளது, தமிழகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

Comment

Successfully posted