ரஷ்யாவில் ஆன்லைன் மேக்கப்பிற்கு பெண்களை விட அதிக ஆர்வம் காட்டும் ஆண்கள்

Jul 11, 2019 09:09 AM 88

ரஷ்யாவில் ஆன்லைன் மேக்கப்பிற்கு ஆண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா, பாலின நெறிமுறைகளை பின்பற்றும் நாடாக கருதப்படும் நிலையில், அந்நாட்டின் ஆண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஆன்லைன் மேக்கப் பயிற்சியில் ஈடுபடுவதகாக தெரிய வந்துள்ளது. தாமாகவே சுய பயிற்சியின் மூலம் மேக்கப்பில் ஈடுபடுவதாகவும், இதற்கான தயாரிப்புகளை வாங்குவதிலும், பெண்களை விட ஆண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், அந்நாட்டின் மேக்கப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆண்களுக்கான பிரத்யேக மேக்கப் தயாரிப்புகளை பெருமளவு சந்தைகளில் இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கு அந்நாட்டில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதை ஆதரிக்கும் ஆண்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

Comment

Successfully posted