மனநல மருத்துவமனையில் வாக்குப்பதிவு செய்த மனநல நோயாளிகள்

Apr 18, 2019 09:38 PM 253

கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 153 மனநல நோயாளிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்

மக்களவை தேர்தலில்100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் 900 க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 159 பேர் சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையிலேயே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 159 பேரில் 153 பேர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

Comment

Successfully posted