மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 , 500 கனஅடியாக உள்ளது

Dec 05, 2019 01:55 PM 274

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 , 500 கனஅடியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

Comment

Successfully posted